தண்ணி கட்! இப்ப எப்படி விவசாயம் பண்ணுவீங்க? மீண்டும் அராஜகத்தில் இறங்கிய என்எல்சி நிர்வாகம்!
Cuddalore NLC issue Kathazhai and mummudi chozhan village
கடலூர் மாவட்டம், வலைமாதேவி பகுதியில் பயிர்கள் விளைந்த வயல்களில் பரவலாறு கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது.
இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பு மக்களையும் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
நேற்று, இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த இந்த பணி நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அந்த பணிகள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், கத்தாழை, மும்முடி சோழன் கிராமத்தின் பாசனத்திற்கு செல்லக்கூடிய நீரை என்எல்சி நிர்வாகம் நிறுத்தி உள்ளது.
மாற்று வழியாக பரவலாறு வாய்க்காலை திருப்பிவிடும் பணி நடைபெற்று வரும் நிலையில், என்எல்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
என்எல்சி சுரங்க உபரி நீரை நம்பி கத்தாழை, மும்முடி சோழன் கிராமதில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் நிலையில், தற்போது என்எல்சி நிர்வாகம் நிறுத்தி அராஜகத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், பாசனத்திற்கு செல்லும் நீரை திருப்பி விடுவதற்காக வாக்கால் வெட்டும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
English Summary
Cuddalore NLC issue Kathazhai and mummudi chozhan village