ஓடுனா விட்ருவோமா!!! கடலூர் காவலர்கள் தப்பி ஓடிய திருடன் மீது துப்பாக்கி சூடு...!!!
Cuddalore police shoot at fleeing thief
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில், திருடன் ஸ்டீபன் காவலர்களைக் கண்டதும் தப்பி ஓட்டம் பிடித்தான்.அவனை விடாமல் காவலர்கள் துரத்தினர்,பிடிக்க முடியாத பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

இவன் சிதம்பரம் அருகே 10 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் லேப்டாப் அனைத்தையும் திருடியுள்ளான். இவன் திருடப்பட்ட நகைகளைச் சித்தாலபாடி சாலை ஓரம் முட்புதரில் பதுக்கி வைத்துள்ளான்.
பதுக்கிய நகைகளை மீட்க சென்ற காவலர்களை மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு ஸ்டீபன் தப்பி ஓட முயற்சி செய்தான்.
அப்போது காவலர்கள் திருடனைப் பிடிக்க துரத்தினர், தப்பிவிடக்கூடாது என்ற பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இதில் கால் முட்டியில் லேசான காயம் திருடனுக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் ஸ்டீபன் மீது குமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cuddalore police shoot at fleeing thief