காவலுக்கு 400 தமிழக போலீஸ்! கடலூரில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வாய்க்கால் வெட்டும் என்எல்சி!
Cuddalore Valaiyamadevi NLC issue TN Police
என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
அந்த நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 400-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 6க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.
கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையாக கொடுமை என்று, விவசாயிகளும், பொதுமக்களும், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று விவசாயிகள், பொது மக்கள், பாமக சார்பில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இதில் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று 2வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடர்ந்து உள்ளது. இதற்க்கு முழுக்கப்பு அரணாக கடலூர் உள்ளிட்ட 6 மாவட்ட போலீசார் 400 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Cuddalore Valaiyamadevi NLC issue TN Police