கடலூர் || வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் சுமார் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த ஏரி சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 

இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமாகவும் தண்ணீர் வரத்து இருக்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால்  தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகமானது. இந்த ஏரி கடந்த மாதமே முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் உபரிநீர் வி.என்.எஸ். மதகு வழியாக திறந்து விடப்பட்டது. 

கடந்த மூன்று நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் கனமழை பெய்து வருவதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக, ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 47.50 அடியாக குறைக்கப்பட்டு, ஏரிக்கு வரும் உபரிநீரான 2 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 

இதனால் வீராணம் ஏரியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் சாலியத்தோப்பு, உசூப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, ராதவிளாகம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், வடமூர் உள்பட சுமார் 30 கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விளைநிலங்களில் புகுந்துள்ளது. 

இதனால் அந்த விளைநிலங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பது மட்டுமில்லாமல், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore veeranam lack water leval increase


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->