CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழக மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயமில்லை!
CUET Entrance Ecam Issue TN Students
மத்திய பல்கலைக்கழக CUET பொது நுழைவுத் தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விளக்கு அளிக்கப்படும் என்று, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2021-இல் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள், இந்த CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியது.
இதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு தரப்பட்ட போல, இப்போதும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மேலும், அடுத்து நடைபெறவுள்ள நீட் தேர்விலும் இதே சிக்கல் ஏற்படும் என்பதால், நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி பேட்டியளித்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன்"CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயமில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
English Summary
CUET Entrance Ecam Issue TN Students