சிக்கன் உணவில் துர்நாற்றம்! பிரபல உணவகத்தை ரவுண்டு கட்டிய வாடிக்கையாளர்கள்! - Seithipunal
Seithipunal


சிக்கன் உணவில் துர்நாற்றம்! பிரபல உணவகத்தை ரவுண்டு கட்டிய வாடிக்கையாளர்கள்!

சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதியில் "பாண்டியன்" என்ற பெயரில் பிரபல அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் சாப்பிட சென்றுள்ளனர். 

அதன் படி, அங்கு சிக்கன் ரைஸ், சிக்கன் தந்தூரி உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சிக்கன் உணவிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், ஓட்டல் மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டு, கெட்டுப் போன உணவை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அந்த கெட்டுப் போன உணவை அப்புறப்படுத்தினர். இருப்பினும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சம்பவம் குறித்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து வந்து உணவை சோதனைக்கு எடுத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

customer complaint to Food Safety department for chicken rice stinks in hotel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->