விழுப்புரத்தை உலுக்கிய சம்பவம்.. கள்ளச்சாராய பலி 5ஆக உயர்வு..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர், தரணிவேல், சுரேஷ் ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று காலை உயிரிழந்தனர். மேலும் கலாச்சாராயம் குடித்த 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு தல 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே இன்று பிற்பகல் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்த நிலையில் தற்பொழுது சிகிச்சை பலனின்றி மலர்விழி என்பவரும் உயிரிழந்துள்ளார். இதனால் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death rises to 5 after drinking fake liquor in villupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->