பலன் அளிக்காத சிகிச்சை... 15 பேருக்கு செயலிழந்த உடல் உறுப்புகள்.. பலி எண்ணிக்கை உயரும் அச்சம்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு கண்பார்வை, சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டும் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையில் உள்ளவர்களின்உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயல் இழந்து வருவதால் எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் குடும்பத்தினரும் உறவினர்களும் கவலையில் உறைந்து போயுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death toll in the Villupuram liquor case may rise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->