ஒரு வாரம் விடுமுறை அறிவிக்க வேண்டும்..அதிமுக EX MLA வையாபுரி மணிகண்டன் கோரிக்கை!
Declare a weeks holiday AIADMK EX MLA Vaiyapuri Manikandan
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஒரு வாரம் விடுமுறை அறிவிக்க வேண்டும். கோடை விடுமுறையை முன்னதாக அறிவித்து பள்ளி குழந்தைகள், மாணவர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் கோடை வெயில் கடுமையாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பகலில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பள்ளி குழந்தைகள், மாணவர்கள், முதியோர் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை நோய்களாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலையிலேயே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். நாள்தோறும் சராசரியாக 96 டிகிரி செல்சியஸ் வெப்பம் புதுவையில் பதிவாகிறது. இந்த வெப்பநிலை வரும் நாட்களில் மேலும் அதிகரித்து 100 டிகிரியை தொடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஒரு வாரம் விடுமுறை அறிவிக்க வேண்டும். கோடை விடுமுறையை முன்னதாக அறிவித்து பள்ளி குழந்தைகள், மாணவர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
English Summary
Declare a weeks holiday AIADMK EX MLA Vaiyapuri Manikandan