அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - கொலையா? தற்கொலையா? - Seithipunal
Seithipunal


தேன்கனிக்கோட்டை அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் சாலையில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான ராகி பயிர் தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரது சடலம் கிடந்துள்ளது. 

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சடலம் அழுகிய நிலையில் கிடந்ததால் இறந்த நபர் எந்த ஊர் யார் என்பது குறித்து தெரியவில்லை. 

இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கொலையா தற்கொலையா என தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

decomposed male corpse beaten death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->