தீபாவளி போனஸை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜிகே வாசன் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்து சதவீதம் போனஸ் வழங்க மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவிகித போனஸ் போதுமானதல்ல. 

இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த கொரோனா காலங்களில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கூட 10 சதவிகித போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நாடு பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழுந்து, இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளது. 

இதனால் அனைத்து பேருந்துகளும் இயங்குகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களும் சீராக இயங்குகின்றது.

இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்னர் வழங்கியது போல் தற்போதும் 20 சதவிகிதம் போனஸ் தொகை கிடைக்கும், இந்த வருடம் பண்டிகையை மனநிறைவோடு கொண்டாடலாம் என்று எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருந்த தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு போனஸ் அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து வழக்கம் போல் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும்" என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali bonas gk vaasan report


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->