காவிரி விவகாரம் : தமிழக, கர்நாடக அரசுகளைக் கண்டித்து டெல்டா விவசாயிகள் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal



காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளைக் கண்டித்து டெல்டா விவசாயிகள் இன்று (ஜூலை 16) பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 

தஞ்சாவூர் :

கர்நாடகாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அணைகள் அனைத்தும் வேகமாக விரும்பி வரும் நிலையிலும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. எனவே கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசிடம் பேசி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 'காவிரி உரிமை மீட்புக் குழு' இன்று காலை முற்றுகைப் போராட்டம் நடத்தியது. 

இதில் தமிழக, கர்நாடக அரசுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்லும் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தியது. இந்த ரயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. உலகநாதன் மற்றும் விவசாயிகள் சங்கத் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மன்னார்குடி :

அதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் கர்நாடக அரசைக் கண்டித்து மன்னார்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். 

இந்தப் போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் தண்ணீர் தராத கர்நாடக அரசையும், தண்ணீரைப் பெற்றுத் தராத மத்திய அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delta Farmers Condemn TN And Karnataka Govt in Cauvery Issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->