உப்பனாறு வாய்க்காலை தூர்வாரும் பணி ..சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்!
Desilting and deepening of Uppanar channel. Speaker Selvam inaugurated
புதுச்சேரி அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் மற்றும் டி என் பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.08 லட்சம் மதிப்பில் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவருமான திரு செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி பூரணாங்குப்பம் பகுதியில் ரூ.3.85 லட்சம் மதிப்பில் வெள்ளை தாமரை நகர் முதல் உப்பனாறு வரை உள்ள வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் வேணுகோபால் நகர் முதல் உப்பனாறு வரை உள்ள வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் மற்றும் டி என் பாளையம் கிராமத்தில் ரூ.4.23 லட்சம் மதிப்பில் ஏஜே பள்ளி முதல் வீரன் கோவில் வரை உள்ள பள்ளமதகு துணைவாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி திரு கார்த்திகேசன் உதவி பொறியாளர் திரு ராமன் இளநிலை பொறியாளர் திரு சிவஞானம் பணி ஆய்வாளர் திரு கணேசன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பாஜக மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன் மாவட்டத் தலைவர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் பாஜக தொகுதி பொறுப்பாளர் லட்சுமிகாந்தன் புருஷோத்தமன் மணி தங்க ரத்தினம் வாழுமுனி ராஜகுரு பார்த்திபன் முனியன் விநாயகம் மற்றும் டி என் பாளையம் பகுதியைச் சேர்ந்த தயாபரன் தேசிகன் வீரச்செல்வம் கண்ணன் குமாரசெல்வன் நாகப்பன் சிவா தர்மன் வீரபாலன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Desilting and deepening of Uppanar channel. Speaker Selvam inaugurated