பிரபல தமிழக அரசியல் கட்சி தலைவர் மோசடி வழக்கில் அதிரடி கைது!
Devanathan Yadav arrested
வின் டிவி உரிமையாளர் தேவநாதன் மயிலாப்பூர் இந்து சுசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நிதி நிறுவன மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் தேவநாதன்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராகவும் இருந்ததாக சொல்லப்பட்டது.
சுமார் ரூ.50 கோடி வரை மோசடி என 140-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் இன்று அவரை கைது செய்துள்ளனர்.
வின் டிவி தேவநாதனை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
English Summary
Devanathan Yadav arrested