சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி.! - Seithipunal
Seithipunal


பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி இன்று முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் காலை 7 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் இரவு நேரங்களில் மலையில் தங்குவதற்கும் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees allowed saduragiri hills


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->