வெள்ளையங்கிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. வனத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு லிங்க கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரக பகுதியை சேர்ந்த வெள்ளையங்கிரி மலை பகுதிக்கு பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் பக்தர்கள் அங்குள்ள சுயம்புலிங்க கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்வது வழக்கம்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் பொதுமக்களுக்கு திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென்று சீதோஷ்ண நிலை மாறுவதால், ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கடந்த சித்ரா பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வெள்ளையங்கிரி மலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் திடீரென்று பக்தர்கள் மலைமீது செல்ல வனத்துறை தடை விதித்தது. மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காரணம் கூறப்பட்டது.

இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல மே மாதம் முழுவதும் மலைமீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees allowed to vellayangiri temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->