பர்கூர் மலைப்பகுதியில் தேங்கிய மழை நீரிலும் நீந்தி சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை அடுத்து பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பர்கூர் ஊராட்சிக்கு 33 குக்கிராமங்கள் உள்ளதால், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வந்ததால் அப்பகுதி மிகவும் பசுமையாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி அளிக்கின்றது. 

மேலும், பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்கரை பகுதி மிகவும் உயரமாக இருப்பதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணையாக இந்த பகுதி காணப்படும். இங்கு  சில்லென காற்று அடிப்பதால் எப்பொழுதும் ஊட்டியில் இருக்கின்ற இயற்கை நிலை காணப்படும். 

இதனால் அந்த பகுதிகளில் ஊட்டி, கோடைகானலைப் போல் அதிக அளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி, கோபி உள்ளிட்ட பகுதியிலி ருந்து அதிகளவில் பர்கூர் மலை பகுதிக்கு வந்து தங்கி செல்வது வழக்கமாக உள்ளது. 

இந்த மலைப் பகுதிகளில் இயற்கையான காற்றும், மூலிகை கலந்த இயற்கை காற்றையும் சுவாசிக்க முடிகிறது என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தங்குவதாகவும்  தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில் வாகனங்களின் புகை மற்றும் ஹாரன் சத்தம் உள்ளிட்டவைகளால் உடலுக்கு அதிகளவில் மன அழுத்தத்தை கொடுப்பதனால், இங்கு வந்து வாரத்தில் 2 நாட்கள் தங்கினால் நல்ல நிலையில் மன அமைதி கிடைப்பதாகவும் தெரிவித்தனர். 

பர்கூர் மலைப்பகுதியில் விளையக்கூடிய தானிய வகைகளான ராகி கம்பு, பச்சைபயிறு, தட்டை ப்பயிறு, பலாப்பழங்கள் மிகவும் சுவையாகவும் இயற்கை உரங்களை பயன் படுத்தி விளைவதனால் இந்த பொருட்கள் மிகவும் மலிவாகவும் கிடைக்கிறது. இங்கு விளையக்கூடிய பொருட்களை வாங்க வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அந்தியூர் சந்தைக்கு  வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். 

பர்கூர் மலைப்பகுதி மேற்கு மலை, கிழக்கு மலை என இரண்டு மலைப் பிரிவுகளாக உள்ளது. மேற்கு மலை பகுதியில் மணியாச்சிபள்ளம் உள்ளதால் இந்த பள்ளத்தில் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீர்பாலாற்றில் கலந்து மேட்டூர் அணையை சென்றடைகின்றது. 

இந்த பகுதி எப்பொழுதும் குளிர்ச்சியாக இருப்பதால், யானை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த பகுதியில் தண்ணீர் குடிப்பதற்கும், அங்குள்ள மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிடுவதற்கு யானை கூட்டங்கள் அதிக அளவில் இந்த பகுதியில் முகாமிட்டி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, மேற்கு மலைப்பகுதியில் தாமரைக்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம்பிரெட்டி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மஞ்சு மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தண்ணீருக்கு நடுவில் உள்ள பாறைகளில் சாமி சிலைகள் அமைந்துள்ளது. 

தற்போது பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், குட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் தண்ணீரில் நீந்தி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees swimming in the stagnant rain water on Barkur hills


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->