#தர்மபுரி || ஒரே பெயரில் இரு ஊர்., எங்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை., ஊர் பெயரை மாற்றி, தனி ஊர் கோரும் மக்கள்.!
Dharmapuri Village name issue
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே பெயரில் இரண்டு கிராமங்கள் இருப்பதால், கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஒரே பெயரில் இரண்டு கிராமங்கள் உள்ளதால், பல ஆண்டுகளாக அரசு திட்டங்கள் இன்றி தவித்து வருவதாகவும், எனவே எங்களது ஊர் பெயரை மாற்ற வேண்டும் மாற்ற வேண்டும் என்று, தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
பொதுமக்களின் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கோபிநாதம்பட்டி அடுத்த ராமாபுரம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம்.
இதே கிராமத்தில் வேறு ஒரு சமுதாய மக்கள் வசித்து வரும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எங்களுடைய அருந்ததியர் இன மக்கள் கிராமம் உள்ளது.
பல ஆண்டுகாலமாக அடிப்படை வசதிகள், அரசின் நலத் திட்டங்கள் அனைத்துமே வேறு ஒரு சமுதாய மக்களுக்கு மட்டுமே சென்றடைகிறது.
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எங்களுடைய அருந்ததியர் இன மக்களுக்கு எந்த ஒரு சலுகையும் கிடைப்பதில்லை. குறிப்பாக அரசு நலத் திட்டங்களும் இதுவரை எதுவும் எங்களுக்குக் கிடைப்பதில்லை.
அதனால் ஊர் மக்களாகிய நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்து, ராமபுரம் என்ற பெயரில் இருந்து பிரித்து, ஊர் மக்கள் தீர்மானத்தின்படி திருத்தேரூர் ஊர் என்ற பெயரை எங்கள் கிராமத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அரசால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
Dharmapuri Village name issue