8 கிராம் தங்க நாணயம் பெற்ற மாற்றுத்திறனுடைய தம்பதி..முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனுடைய தம்பதியினர்கள்,தமிழ்நாடு முதலமைச்சருக்குமன நிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர்.
 
“உரிமைகள் திட்டம்”த்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, அடையாள அட்டை தேவை என கண்டெடுக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு UDID அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. அதில், சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 2024 வரை 5,465 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு முகாம்கள் நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பபட்டுள்ளது. 

மேலும், மாற்றுத்திறனாளிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கும்,“விழுதுகள்”எனும்ஆரம்பநிலசிகிச்சைமையங்கள்,மாநிலம்முழுவதும்துவங்கப்பட்டுள்ளது.மேலும்,மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில், நான்கு வகையான திருமண திட்டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனுடைய தம்பதியினர்கள்,தமிழ்நாடு முதலமைச்சர்க்குமன நிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர்.

மாற்றுத்திறனுடைய தம்பதியினர் திரு.தினேஷ்குமார் மற்றும் திருமதி புஷ்பம் அவர்கள் திட்டப்பயன்கள் குறித்து தெரிவிக்கையில்,தம்பதிகளாகிய நாங்கள் இருவருமே மாற்றுத்திறனாளிகள். நாங்கள் கீழப்பூங்குடி பகுதியைச் சார்ந்தவர்கள். நாங்கள் பட்டப்படிப்பு பயின்றுள்ளோம். தற்போது, காரைக்குடி பகுதியில் வசித்து கொண்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயின் வாயிலாகவே, எங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.மாற்றுத்திறனாளியான நாங்கள் இருவருமே எங்களது தேவைகள் மட்டுமன்றி, எங்களது பெற்றோர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டியது எங்களின் கடமையாகும்.

அதற்கு அடிப்படையாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கின்ற வகையில், எங்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட வருகிறது. சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக நாங்கள் திகழ்ந்திடும் வகையிலும், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிறரைச் சார்ந்திருக்காமல், தன்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்கான அடிப்படையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது எங்கைளைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

இவ்வாறாக, மாற்றுத்திறானிகளின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வரும் தமிழக அரசு, திருமண நிதியுதவியும் வழங்கி எங்களின் நலன் காத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வகையான திட்டங்களில், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி மணக்கும் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாங்கள் விண்ணப்பித்தோம்.

அத்திட்டத்தின் கீழ், எங்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.50,000/-மதிப்பீட்டிலான நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, கிடைக்கப்பெற்ற திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவைகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களது திருமணத்திற்கு பரிசாக அளித்ததாக மனமகிழ்ச்சி அடைகின்றோம். தற்போது, கிடைத்துள்ள நிதியுதவியானது, எங்களது வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கு அடிப்படையாகவும், பேருதவியாகவும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து, எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, எங்களைப் போன்று திருமண நிதியுதவி பெற்ற மாற்றுத்திறனாளி தம்பதிகள் சார்பில் மட்டுமன்றி, பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பிலும் மனநிறைவுடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என மாற்றுத்திறனுடைய தம்பதியினர் திரு. தினேஷ்குமார் மற்றும் திருமதி புஷ்பம் அவர்கள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Differently-abled couple gets 8 gram gold coin Thank you to the Chief Minister


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->