இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை திருமணம் செய்த வாலிபர்..!!!!
Dindivanam Minor girl Instagram love escape case
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது சிறுமியை திருமணம் செய்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, திடீரென வீட்டில் காணாமல் போனதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
போலீசார் விசாரணை செய்தபோது சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளது கண்டறிந்தனர்.
பின்னர் அச்சிறுமி அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த இளைஞர் யாரென விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அச்சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Dindivanam Minor girl Instagram love escape case