பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது; "பொறியியல் சேர்க்கைக்கு நேற்று வரை 42,716 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பொறியியல் காலியிடங்கள் உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று (23-ம் தேதி) முதல் ஜூலை 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜூலை மாதம் கடைசியில் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாமதம் ஆனால் மாணவர் சேர்க்கைக்கு தாமதம் ஏற்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாட்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு செய்ய நாட்கள் நீட்டிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diploma college students apply from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->