பாலிடெக்னிக் டிப்ளமா செமஸ்டர் தேர்வு எப்போது? - வெளியானது முக்கிய அறிவிப்பு.!
diplomo semaster exam time table released
தமிழகத்தில் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்.23-ம் தேதி தொடங்கும் என்று தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

"பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 9-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இந்தத் தேர்வு தினமும் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வின் பொழுது மாணவர்களுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
diplomo semaster exam time table released