வீட்டில் இருந்த வண்டிக்கு ₹1000 அபராதமா.! மாற்றுத்திறனாளி குமுறல்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மத்திய அரசின் புதிய போக்குவரத்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதும், இரு சக்கர வாகனங்களுக்கு சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த மாற்றத்தினால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்த வீடியோவில் அனைத்து  விதிமுறைகளையும் பின்பற்றி வாகனத்தில் நானும் என் மகனும் பயணித்தோம். எங்கள் வாகனத்தை காவல்துறையினர் பார்த்தும் நிறுத்தவில்லை.

இந்நிலையில் குருசலாப்பட்டு போலீசார் ₹1,000 அபராதம் விதித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்ததாக தெரிவித்துள்ளனர். சாப்பாட்டிற்கே நாங்கள் கஷ்டப்படுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மாற்றுத்திறனாளி கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disabled people upset rs1000 fine for vehicle at home


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->