கணவன் மனைவியிடையே தகராறு...! மனைவிக்கு தீ வைத்துக்கொள்ள காரணம் என்ன?
dispute between husband and wife reason for setting wife on fire
கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள மேலபழஞ்சநல்லூரை சேர்ந்தவர் அய்யப்பன் மகன், 25 வயதான விக்னேஷ் என்பவர். இவர் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கும், 24 வயதான சினேகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தகவல் தெரிந்தது.
மேலும், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொளுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
English Summary
dispute between husband and wife reason for setting wife on fire