தவெக தலைவரின் உதவியாளர் மகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி..!
district excuetive posting to vijay asisstent son
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று 6-வது கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டார். அதில், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜேந்திரன் விஜய்யின் ஓட்டுநராக இருந்து உதவியாளராக உயர்ந்தவர். இவர் விஜய்யுடன் 40 ஆண்டுகளாக தொடர்ந்து உடனிருந்து வருகிறார். ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் இருபத்தொரு வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்தவர்.
சுமார் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் இயக்கப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாகவே சபரிநாதனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
district excuetive posting to vijay asisstent son