தீபாவளி எதிரொலி : 2 நாட்களில் மது விற்பனை வசூல் இத்தனை கோடியா?...தமிழகத்தில் 5 மண்டலங்களின் தகவல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும். மேலும், அரசு டார்கெட்டை நிர்ணயித்து மதுபான விற்பனை செய்யும்.

கடந்த 2023-ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களாக அரசு மதுபானக் கடைகளில் 467.69 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. மேலும் இது பெரும் பேசு பொருளாக மாறியது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மது விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

30ம் தேதி விற்பனை விவரம் :

சென்னை - ரூ.47.16 கோடி
மதுரை - ரூ.40.88 கோடி
திருச்சி -  ரூ.39.81 கோடி
சேலம் - ரூ.38.34 கோடி
கோவை -ரூ.36.40 கோடி

31ம் தேதி மது விற்பனை விவரம் :

சென்னை -  ரூ.54.18 கோடி
மதுரை  - ரூ.47.73 கோடி
திருச்சி - ரூ.46.51 கோடி
சேலம் - ரூ.45.18 கோடி
கோவை - ரூ.42.34 கோடி

இதில், கடந்த 30ம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி நாளான 31ம் தேதி ரூ.235.94 கோடி என மொத்தம் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டைவிட ரூ.29.10 கோடி குறைவாகும்.  கடந்த ஆண்டு மது விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடம் பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali echo liquor sales collection in 2 days so many crores information release of 5 mandals in tamil nadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->