தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்! - Seithipunal
Seithipunal


வருகிற அக் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளின் சீட்டுகள் நிரம்பி விட்டன.

60 நாட்களுக்கு முன்பாகவே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் முறை உள்ளது. பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நீண்ட தொலைவு செல்ல கூடிய எஸ்.இ.டி.சி பேருந்துகளில் உறங்குவற்காக படுக்கை வசதியும், குளிர்சாதன வசதி போன்றவை உள்ளதால் மக்கள் அதிக அளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த சூழலில், அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை குடும்பங்களோடு பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், வருகிற தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லக் கூடிய பயணிகள் கடந்த 1 மற்றும் 2-ம்  தேதிகளில் முன்பதிவு செய்து கொண்டனர். மேலும் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பயணிகள் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கிய நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் பேருந்துகளின் சீட்டுகள் நிரம்பி விட்டன.

இதனை தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்த விட்டு நவம்பர் 3-ந் தேதி அன்று பயணிகளின் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு மீண்டும் வருவதற்கு பெரும்பாலான சீட்டுகள் நிரம்பி விட்டன. மேலும் 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali Festival Government Express Buses Booking Start


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->