வெற்றி துரைசாமி மறைவு - பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பருடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். 

அதன் படி, இந்த கார் சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆனால் வெற்றி துரைசாமி மட்டும் மாயானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வெற்றியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK leader premalatha vijayakant condoles to vetri duraisami death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->