தடைகளை உடைப்பதே திமுகவின் பணி - மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறியதுடன் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:- * காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து மிக மிக மகிழ்ச்சியோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். * பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசி போக்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம்.

"பெற்றோருக்கு உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் பாராட்டுகின்றனர். காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் இந்த சமூகத்தை நலமான, வளமான, அறிவுமிக்க சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்.

காலை உணவு திட்டம் பெற்றோருக்கான சுமையை குறைத்து பள்ளி வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, குழந்தைகள் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது. நாம் தொடங்கிய காலை உணவு திட்டம் கனடா போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டு உள்ளது.

மாணவர்களின் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பதே தி.மு.க.வின் பணி. பொய் செய்திகளை உருவாக்கி குளிர்காய நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது. ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்கள் நம்மை பாராட்டமாட்டார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk broke barriers mk stalin speech


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->