அதிகாலையிலேயே சோகம் - திமுக முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்.!!
dmk ex mla kandhasami passed away
திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆரம்பமான காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து பணியாற்றியவர். கடந்த 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெட்ரா கந்தசாமி, 1971-ம் ஆண்டு தேர்தலிலும் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். அவரது மறைவு கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
dmk ex mla kandhasami passed away