குமரியில் பரபரப்பு - திமுக நிர்வாகி திடீர் சஸ்பெண்ட்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடில் மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவரும், அரசுப் போக்குவரத்து கழக ஊழியருமான சேவியர் குமார் பாதிரியார் ராபின்சன் என்பவரிடம் கேள்வி கேட்டுள்ளார். மேலும், ஆலய நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். 

இதற்கிடையே சேவியர் குமாரின் மனைவி ஜெமீலா மைலோடு, ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், சேவியர் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் பள்ளியில் பணியில் சேர்ப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன் படி சேவியர் குமார் மைலோடு ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்துக்கு சென்ற நிலையில், கடந்த 19 ஆம் தேதி மாலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் சேவியர் குமார் கொலை தொடர்பாக, மைலோடைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், முரசங்கோடு பாதிரியார் பெனிட்டோ உள்ளிட்ட 15 பேர் மீது கொலை உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துறைமுருகன் உத்தரவிட்டார். திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk excuetive ramesh babu suspend in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->