#ஈரோடு || நகைக்காக திமுக பெண் வார்டு கவுன்சிலர் கொலை.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சோள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபா திமுக வார்டு கவுன்சிலராக இருந்து வரும் நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற ரூபா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மகன் வீடு வேலை செய்யும் இடத்தில் சென்று கேட்டுள்ளார். அப்போது ரூபா வேலைக்கு வரவில்லை என தெரிவித்தும்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கரூர் மாவட்டதில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பெண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறைனர் நடத்திய விசாரணையில் இறந்த பெண் ரூபா என தெரிய வந்தது. மேலும் அவரது கழுத்தில் இருந்த நகைகளும் திருடப்பட்டிருந்து தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவருடன் வேலை செய்துவர்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது  ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி நித்யா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்திற்காக ரூபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

வேறொரு இடத்தில் வேலை இருப்பதாக கூறி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று ரூபாவை கொலை செய்து விட்டு நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனைத் அடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரையும் நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK female councilor killed for jewellery in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->