#ஈரோடு_கிழக்கு:: வீட்டுக்கு ஒரு அரிசி மூட்டை.. திமுக சார்பில் வழங்கப்படுவதாக புகார்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் உச்சத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே திமுக சார்பில் பட்டுப் புடவை, வெள்ளி கொலுசு, காமாட்சி விளக்கு, ஸ்மார்ட் வாட்ச் போன்றவை வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தற்பொழுது ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ எடையுள்ள அரிசி மூட்டை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஆமினி கார்களில் சென்று ஒவ்வொரு வீடாக 5 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பரிசு பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தொகுதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு உள்ளூர் அரசியல் நிர்வாகிகளை கொண்டு பணம் விநியோகம் செய்ய அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK give rice pack to each voters in Erode East


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->