திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி..இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
DMK inaugurates Iftar Leaders of Indias coalition parties attend
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் மாநில திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநில திமுக சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில், ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை முகம்மதியா மஹாலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமை தாங்கினார்.சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில அமைப்பாளர் முகம்மது ஹாலித் வரவேற்றார்.சுல்தான்பேட்டை அல்மதினா பள்ளிவாசல் இமாம் முகம்மது மூசா மண்பயி, ஜெய்னுதீன் பாகவி ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்ய முஹம்மது ரபீக், ராஜ்முகம்மது, அஹது, அஹமதுல்லா, அப்துல் ரசீது, சித்திக், நிஜாம், சுகுது, இஸ்மாயில், சிராஜிதீன், யாசின், இஸ்மத், தைபு, இக்பால், அபுசாலி, ஜாகீர்உசேன், பஜிலுதீன், சையது அலி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து நோன்பு திறந்தனர்.
இப்தார் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், தொகுதி செயலாளர் பழநி, மதிமுக கபிரியேல், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் சகாபுதீன், சிபிஐ அந்தோணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், இராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், சக்திவேல், வடிவேல், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தகர் அணி ரமணன், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், தலைவர் முகம்மது தாஹா, துணைத் தலைவர் பக்ருதீன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பஜிலுதீன், இலக்கிய ணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஹாஜி முகம்மது, தொமுச அங்காளன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷேக், அவைத்தலைவர் ஜலால், செயற்குழு உறுப்பினர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி அசாருதின், கிளைச் செயலாளர்கள் முகம்மது சுல்தான், கமால் பாஷா, அன்சாரி, சிராஜிதீன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், முஹம்மதியா பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள், உலமாக்கள், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள், ஊர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
English Summary
DMK inaugurates Iftar Leaders of Indias coalition parties attend