திமுக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் வருமானத்திற்கு அதிகமாக ரூ.44, 56, 067 அளவிற்கு கூடுதலாக சொத்து சோ்த்ததாக, 2012 ஆம் ஆண்டில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனை விடுவித்து உத்தரவிட்டது.

இதேபோல், அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்துக் குவித்தாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த இரு வழக்குகளிலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தரப்பு மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாகவே முன்வந்து விசாரித்தாா்.

மேலும், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்றப் பதிவாளர் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்கநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதில் கவனிக்க தக்க கூடிய விவகாரம் என்னவெனில், கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தரப்பில் மட்டும் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயா்நீதிமன்ற நீதிபதியை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister case Supreme Court Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->