ஆந்திர மாநிலத்தில் தடுப்பணை கட்ட முயற்சி செய்தால் அதை தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் தடுப்பணை கட்ட முயற்சி செய்தால் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடி தாலுகா சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும். காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் மழை நீர் தேங்க விடாமல் தடுக்க, ஆங்காங்கே தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

 ஆந்திர மாநிலத்தில் புதியதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk Minister Durai Murugan press meet


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->