திமுக எம்பி-க்கு ரூ.908 கோடி அபராதம்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அரக்கோணம் திமுக எம்பி ஜெயத்ரட்சகன், அவரது உறவினர்கள் இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளதாகவும், ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கும், பின்னணியும்:

பல ஆண்டு காலமாகவே சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெயத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

தொடர்ந்து கடந்த வருடம் ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய  70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP JagathRatchagan ED Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->