முதலமைச்சர் தலைமையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம்.!
dmk mp meeting in chennai
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 1-ம் தேதி நடப்பு (2025-2026) ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர், பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த நிலையில், நாளை பாராளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

பட்ஜெட் மீது நடைபெறும் விவாதத்தை முன்னிட்டு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?. எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்? யார் யார் பேச வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
English Summary
dmk mp meeting in chennai