மிஸ் ஆன இரண்டு திமுக அமைச்சர்கள்! வருத்தமா? பின்னணி என்ன? பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாஇன்று நடைபெற்றது. இதில், 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சிவசங்கர் பங்கேற்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

இது குறித்து வெளியான தகவலின் படி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் மதுரைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் மதுரையில் அவரின் தாயாரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளதாகவும், பிறகு மதியம் ஒன்றரை மணி அளவில் மதுரை விமான நிலையத்துக்கு புறப்பட்டு வந்துள்ளார், ஆனால், அவர்களுடைய விமானம் புறப்பட கால தாமதமானதால் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

சுமார் 2 மணி நேரம் அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் புறப்படவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. 

இதேபோல் அமைச்சர் சிவசங்கர் தனது இரண்டாவது மகனின் படிப்பிற்காக லண்டன் சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 26 ஆம் தேதியே முதலமைச்சரின் அனுமதி பெற்று அமைச்சர் சிவசங்கர் லண்டன் சென்றுள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகவே அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK new Cabinet PTR and Sivasankar Missing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->