#சேலம் || பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தையால் திட்டிய திமுக பிரமுகர் இடைநீக்கம்...!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் திருமலைகிரியில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின இளைஞர் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஊர் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர மறுப்பதாக தெரியவந்ததை அடுத்து கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்த வீரபாண்டி ஒன்றியத்தில் திமுக செயலாளர் மாணிக்கம் என்பவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு பட்டியலின இளைஞரை தாக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பட்ட மக்களும் திமுக நிர்வாகிக்கு எதிராகவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகி பட்டியலின இளைஞரை ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் பட்டியலினை இளைஞரை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்ற வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கத்தின் மீது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சேலம் கிழக்கு மாவட்டம் சேலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவ பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK official suspended for insulting Scheduled Youth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->