தொடங்கும் கோடைகாலம் - திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


தற்போது தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வருவதால் மக்களை காக்க தமிழகமெங்கும் தண்ணீர் - நீர்மோர் பந்தல் அமையுங்கள் என்று தி.மு.க.வினரை கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மார்ச் மாத துவக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களை இக்கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், திமுக சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என்று அனைத்து இடங்களிலும் - மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும் - சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் "தண்ணீர் பந்தல்" அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும். 

அப்படி தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இந்தத் தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk party order to members water supply pandals across tamilnadu for summar days


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->