நீட் முறைகேடு - திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சை உண்டானது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ம் தேதி தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதாவது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk students team protest against neet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->