நகைக்கடையில் புகுந்து, கவரிங் நகையை வைத்து, தங்க நகையை திருடிய திமுக வார்டு செயலாளர்.! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் பகுதியில் வாடிக்கையாளர் போல நகைக் கடைக்குள் நுழைந்து கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை திருடி தின்ற திமுக வார்டு செயலாளரால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் நகை கடை ஒன்றுக்கு வந்த ஒரு பெண் நகை வாங்க வரும் கஸ்டமர் போல உள்ளே நுழைந்து, நகை டிசைனை கடை ஊழியரிடம் கேட்டு வாங்கிப் பார்க்கிறார். அப்போது தனக்கு இந்த டிசைன் பிடிக்கவில்லை வேறு காட்டுங்கள் என்று ஒரே ஒரு நகையை மட்டும் வைக்கச் சொல்கிறார்.

இதை நம்பிய கடை ஊழியரும் அந்த ஒரு நகையை மட்டும் வைத்துவிட்டு மற்ற டிசைன்களை எடுக்க திரும்பியவுடன் அவர் கையில் வைத்திருந்த கவரிங் நகையை அட்டையில் வைத்துவிட்டு அதில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து மறைத்து வைத்துக் கொள்கிறார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் கடை ஊழியர்களின் கவனத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து, கடை உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அங்கமங்கலம் 8வது வார்டு செயலாளர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி வீடீயோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Thiruchendur Ward secretary theft In gold Showroom


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->