ரஜனிகாந்த் பேட்டி! ரோட்டில், போவோர் வருவோரிடமெல்லாம் கேட்கிறார்கள் - உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட உள்ளார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், உங்களிடம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், என்னிடம் அரசியல் சம்பந்தமான கேள்விகளை கேட்கக்கூடாது என்று, காட்டமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி குறித்தும், அவரின் பதில் குறித்தும் அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். துணை முதல்வர் குறித்து ரோட்டில் போவோர் வருவோரிடமெல்லாம் கேட்கிறார்கள். 

இப்படி சொன்னதால் சூப்பர் ஸ்டாருக்கு பதிலடி என்று கூட செய்தி போடுவார்கள். நானே எடுத்து தருகிறேன். பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் தான் அழிந்து போய் உள்ளன. முதலில் அழிந்தது அதிமுக என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Udhay say about Deputy CM and Rajini Press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->