பாஜக நிர்வாகியின் அராஜகம்.. டாக்டர் பட வில்லன் வேதனை..!! ஆக்ஷன் எடுப்பாரா அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற கராத்தே கார்த்தி என்பவர் திரைப்பட நடிகராக உள்ளார். இவர் சிங்கம் 3, என்னை அறிந்தால், பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் தனது வீட்டின் அருகே வசித்து வந்த வெங்கடேசன் என்பவர் சட்டவிரோதமாக 4 கழிவுநீர் இணைப்புகளை பயன்படுத்தி வருவதாக கார்த்தி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கழிவு நீர் இணைப்புகளை அரசு அதிகாரிகள் துண்டித்ததாக கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபர் பாஜகவில் இருப்பதாகவும் அதிகாரத்தில் இருப்பதால் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புலம்பியுள்ளார். எனவே பாஜக தலைவர் அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கராத்தே கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Doctor actor requests to annamalai take action against BJP executive


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->