மகளிர் உரிமைத்தொகை வேண்டுமா.? இந்த 12 தகவல்கள் கட்டாயம்.. முழு விவரம் இதோ.!!
Documents required for TN Women Entitlement Scheme
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பயனாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான சில விதிமுறைகள், தேவையான ஆவணங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி,
1) பயனாளர்கள் மொபைல் செயலி மூலம் குடும்ப அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண் வழங்க வேண்டும்.
2) பயனாளர்கள்தங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வயது, மாவட்டம், செய்யும் தொழில், போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
3)பயனாளர்கள் வசிப்பது வாடகை வீடா? அல்லது சொந்த வீடா? நிலம் வைத்திருப்பவரா? வாகனம் வைத்துள்ளாரா? போன்ற கேள்விக்கான தகவலை பதிவு செய்ய வேண்டும்.
4)இறுதியாக பயனாளர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ததோடு உறுதிமொழி அளிக்க வேண்டும்.
5)திட்டத்தின் பயனாளர்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிப்பார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 தகவல்களை பூர்த்தி செய்யும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
Documents required for TN Women Entitlement Scheme