வாக்களிக்கத் தகுந்த ஆவணங்கள் எவை? எவை? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பூத் ஸ்லிப் இல்லாத வாக்காளர்கள் தங்களிடம் உள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வாக்களிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை இரண்டும் இல்லாதவர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தால் வழங்கப்பட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், தொழிலாளர் அமைச்சகம் வழங்கியுள்ள மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Documents to vote


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->