நாயை இரும்பு கம்பியால் தாக்கிய விவகாரம்.. தூய்மை பணியாளர் பணிநீக்கம்!
Dog attacked with iron rod Sanitation worker sacked!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நாய் ஒன்று சுற்றிக்கொண்டிந்தது. இதை பார்த்த அவர் நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தியுள்ளார். அப்போது அந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது.
இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது, மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் எரிச்சலாய் எச்சரித்தனர். இந்த நிலையில் காமராஜரை பணி நீக்கம் செய்து மன்னச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
English Summary
Dog attacked with iron rod Sanitation worker sacked!