வளர்ப்பு நாயை மாடியில் இருந்து தூக்கி எறிந்த நபர்.! விடாமல் குறைத்ததால் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


குரைத்த நாயை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அயோத்திகுப்பம் நகரில் வசித்து வருபவர் பிரவீன். இவர் ஆசை ஆசையாக செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அவரது வீடு நான்காவது மாடியில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரவீன் வசித்து வந்த நான்காவது மாடிக்கு சிலர் மது போதையில் வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்து இந்த நாய் குரைத்துள்ளது. அந்த நபர்கள் நாயை அன்பாக தடவிக் கொடுப்பது போல நடித்து அதனை நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த நாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் சென்னை மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த காவல்துறையினர் நாயை மாடியில் இருந்து தூக்கி எரிந்து கொலை செய்த சேப்பாக்கத்தை சேர்ந்த ஸ்டெர்லின் என்பவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog throw in fourth floor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->