சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘புத்தக தான அரங்கு’!
Donate book stall in Chennai Book fair
சென்னையில் 46வது புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டன.
இந்த புத்தக திருவிழாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய சென்னை புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவிற்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் உலக அளவில் புகழ்பெற்ற புத்தகங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக இந்த புத்தக கண்காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பதிப்புகளும் இடம்பெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக தான அரங்கு புத்தக வாசர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அரங்கு மூலமாக வாசகர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் புத்தகங்கள், சிறைவாசிகள் வாசிப்பதற்காக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Donate book stall in Chennai Book fair